சுடச்சுட

  

  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
   இந்த முகாமில், தனியார் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில், 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டங்கள் மற்றும் பி.டெக் பட்டம் பெற்றவர்கள், 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். முகாமில், பங்கேற்க விரும்புவோர், தங்களது அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் வெள்ளிக்கிழமை (ஆக. 16 ) காலை 10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai