சுடச்சுட

  

  நாட்டின் 73 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
   கண்காட்சியை அரசு அருங்காட்சியக கூடுதல் பொறுப்பு காப்பாட்சியர் சிவகுமார் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மகாத்மா காந்தி பிறப்பு, படிப்பு, திருமணம், சட்டப்படிப்பு, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம், சிறைவாசம், அரசியல் வாழ்க்கை, பாதயாத்திரை, இறப்பு போன்றவைகளின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், புகைப்பட அஞ்சல் அட்டை உள்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், சிறப்பு உறைகள் நாணயங்கள் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
   இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ரமேஷ், முகமது சுபேர் உள்பட பலர் தங்களது சேகரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். வரலாற்று ஆசிரியர் சரஸ்வதி, தாமோதரன், மன்சூர், குமரன், கமலக்கண்ணன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai