சுடச்சுட

  

  திருச்சியில் வெவ்வேறு இடங்களில் இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   திருச்சி கீழ ஆண்டாள் வீதி திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(55). இவர், கடந்த 12 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார்.
   திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் மாயாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
   மற்றொரு சம்பவம்: திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன்(41). வியாபாரி. இவர், கடந்த 12 ஆம் தேதி மலைக்கோட்டை தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச் சென்றார்.
   மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
   இவ்விரு சம்பவங்கள் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai