அக். 2-க்குள் அந்நிய பொருள்களை ஒழிப்போம்: வணிகர் சங்கங்களின் பேரவை 

காந்தி பிறந்த நாளான அக். 2 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அந்நிய பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார் வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன்.

காந்தி பிறந்த நாளான அக். 2 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அந்நிய பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார் வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன்.
 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சுதேசி பயணக்குழுவினர் அந்நியப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் சுதேசி பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தக் குழுவினர் புதன்கிழமை திருச்சி வந்தடைந்தனர்.
 தொடர்ந்து திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த. வெள்ளையன் தலைமை வகித்தார். இதில், அந்நியப் பொருள்களைப் புறக்கணிப்போம், இந்தியப் பொருள்களை வாங்கி விநியோகிப்போம், இந்திய வங்கிகள், இந்திய நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற வகையில் சுதேசி பிரகடன முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைபுரிந்த வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் அளித்த பேட்டி: வணிகர்கள், வாடிக்கையாளர்கள் அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.
 ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரத்தை, அந்நிய ஆதிக்கத்தால் மீண்டும் நாம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதித்து உள்நாட்டு வியாபாரத்தை அழித்து வருகின்றனர்.
 ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். அக். 2 ஆம் தேதி காந்தி பிறந்த தினத்திற்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் வெளிநாட்டு பொருள்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com