முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டுகள் தனியார் மையங்கள் மூலம் பெற அனுமதி

ரயில் நிலையங்கள் தவிர, முகவர்கள் மற்றும்   தனியார் பயணச்சீட்டு சேவை மையங்கள் மூலம் ரயில்

ரயில் நிலையங்கள் தவிர, முகவர்கள் மற்றும்   தனியார் பயணச்சீட்டு சேவை மையங்கள் மூலம் ரயில் பயணச்சீட்டு வழங்கும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி கோட்டத்தில் 72மையங்கள் அமைக்க  ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
ரயில்வே கவுண்டர்கள் தானியிங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம், ரயில்நிலைய தனியார் பயணச்சீட்டு முகவர் மற்றும் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு அல்லாத பயணச்சீட்டுகளை ரயில் பயணத்துக்கு பெறலாம். இதுதவிர ஜன சதார்ன் டிக்கெட்  புக்கிங் சேவாக் என அழைக்கப்படும் பொதுமக்களுக்கான  பயணச் சீட்டு தனியார் சேவை மையங்கள் மூலம்  ரயில் நிலையம் அல்லாத பிற பகுதிகளிலும்  பயணச்சீட்டு விற்பனை செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரயில்வே கவுண்டரில் வழங்குவது மாதிரியான பயணச்சீட்டுகளையே வழங்குவர். பயணி ஒருவருக்கு கூடுதலாக ரூ.2 கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.
தெற்கு ரயில்வேயில் 102 பொதுஜன பயணச் சீட்டு சேவையாளர் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 48 . இதன் மூலம்  மாதாந்திர ( சீசன் டிக்கெட்) பயணச்சீட்டுகளும்  பெறமுடியும்.  அதற்கு ரூ. 5 கூடுதல் கட்டணம். முன்பதிவு அல்லாத மூத்த குடி மகன்களுக்கான பயணச்சீட்டுகள் மற்றும் நடைமேடை (பிளாட்பார) சீட்டுகள் வழங்க இவர்களுக்கு அனுமதி உண்டு. கிராமப்பற ரயில் நிலையங்களில் ஒப்பந்ததாரர்களையும், பாதையோர ரயில் நிலையங்களில் தனியார் முகவர்களையும் படிப் படியாக திருச்சி கோட்டம் நியமித்துள்ளது. ஒரு சில நிலையங்கள் தகுதியான ஆட்கள் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது. 
தற்போது 72 ரயில் நிலையங்களில் பொதுஜன பயணச் சீட்டு சேவையாளர்களை நியமிக்க ஒப்பந்த புள்ளி திருச்சி கோட்டம் வெளியிட்டு உள்ளது.  இதில் திருச்சி, திருச்சி டவுன், பாலக்கரை, தஞ்சை, விழுப்புரம், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, வேலூர், விருத்தாச்சலம், மன்னார்குடி, கடலூர், என அதிக பயணிகள் ஏறும் ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளன. ஒப்பந்த காலம் மூன்று ஆண்டுகள், இதற்காக  ரூ 2 லட்சம் செலவு விண்ணப்பிக்க கடைசி நாள் 23 செப்டம்பர் 2019 என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
தொழிற்சங்கம் அதிருப்தி :ரயில்வே முன்பதிவு பயணச்சீட்டுகள் ஆன்லைன் விற்பனை 66 சதவீதமாக உயர்ந்து விட்டது. இதனால் ரயில் முன்பதிவு கவுன்டர்களில் 75 சதவீதம் முன்பதிவு அல்லாத கவுண்டர்களோடு நாடுமுழுவதும் இணைக்கப்பட்டு விட்டது. இப்போது முன்பதிவு அல்லாத பயணச்சீட்டுகள் விற்பனையினை முற்றிலுமாக தனியார் வசம் கைமாற்றிவிட ரயில்வே திட்டமிடுகிறது. இதனால் ரயில்வே குமாஸ்தாக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 
பயணிகள்  ரயில்களில் 45 கி.மீ தூரம் பயணத்திற்கு ரூ.10 பயணக்கட்டணம் செலுத்தும் சாமானியன் கூடுதலாக ரூ. 2 சேவையாளர்கள் கட்டணமாக செலுத்துவது 20 சதவீதம் கட்டண உயர்வுக்கு ஒப்பானது. சேவையாளர்கள் கட்டணம் ரூ. 1 ஆக இருந்தது கடந்த ஆண்டு ரூ. 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் உயரவும் வாய்ப்பு இருக்கிறது. பொதுஜன பயணச் சீட்டு சேவையாளர்கள் நியமினம், ரயில்வே பயணச்சீட்டுகள்  விற்பனையியை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம். இது ரயில்வே தனியார்மய நடவடிக்கை.  எனவே இத்திடம் திட்டம் கைவிடப்பட வேண்டும் என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com