Enable Javscript for better performance
தாய்மொழியில் கற்பதே மாற்றத்தை ஏற்படுத்தும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தாய்மொழியில் கற்பதே மாற்றத்தை ஏற்படுத்தும்

    By DIN  |   Published On : 25th August 2019 03:18 AM  |   Last Updated : 25th August 2019 03:18 AM  |  அ+அ அ-  |  


    தாய்மொழியில் கற்பதும், கற்பித்தலும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என தேசிய கல்வி கண்காணிப்புக் குழு உறுப்பினர் வினோத் கருவரகுண்டு தெரிவித்தார்.
    திருச்சி தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்குபெற்ற, உயர் கல்வியில் தர மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த குழு விவாதம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இந்த விவாத நிகழ்ச்சியை, தொடக்கி வைத்து மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கல்வி கண்காணிப்புக் குழு உறுப்பினர் வினோத் கருவரகுண்டு பேசியது:
    உயர்கல்வி என்பது சிறந்த பண்பாளர்களை உருவாக்குவதாக அமைய வேண்டும். மொழி ஆளுமை, திறன்மேம்பாடு ஆகியவை இரண்டாவதாக முக்கியத்துவம் தர வேண்டியவை. முதலில் நல்ல பண்பாளர்களை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப கற்பித்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். 
    கற்பதும், கற்பித்தலும் அவரவர் தாய்மொழியில் அமைந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தந்த சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டுமெனில் தாய்மொழி வழிக் கல்வியே அவசியமானது. 
    50 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை கிராமப்புற மக்களுக்கு மருத்துவர் கிடைப்பதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. ஆனால், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 35 விழுக்காடு இந்திய மருத்துவர்கள். இது இந்தியாவுக்கு பெருமையாக இருந்தாலும் உயர்கல்வியின் நோக்கம், கிராம்பபுற பகுதிகளையும் தத்தெடுத்து மேம்படுத்துவதாக அமைய வேண்டும். 
    புதிய கல்விக் கொள்கையில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கிராமப்புறங்களில் அனைவருக்கும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ள பல்கலைக் கழகங்கள், கல்வித்துறை, ஆசிரியர்கள் உள்வாங்கி அதற்கு தயாராக வேண்டும் என்றார்.
    தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ப. மணிசங்கர் பேசுகையில், தொடக்கத்தில் குருகுலக் கல்வியாக இருந்த நமது கல்வி முறை, பின்னர் ஏட்டுக் கல்வி முறைக்கு வந்தது. இப்போது மாணவர்களை மையப்படுத்தி புதிய கல்விமுறை கொண்டு வரப்படவுள்ளது. உலக அளவில் உயர்கல்வியில் சேரும் 17 முதல் 23 வயதுக்கு உள்பட்டோரின் எண்ணிக்கை 25.8 விழுக்காடாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் 48.6 சதமாக உள்ளது. இருப்பினும் கிராமப்புறங்கள் முன்னேற வேண்டும் என்றால் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது. கற்பித்தல் மட்டுமே இல்லாமல், ஆசிரியர்-மாணவர்களுக்கு இடையே விவாதம், கலந்தாய்வு என்ற அடிப்படையில் புதிய கல்வி முறை கொண்டு வரப்படுகிறது என்றார்.
    இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஆர். சுந்தரராமன், செயலர் கே. ரகுநாதன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பார்த்தசாரதி, திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் உதவி ஆலோசகர் பிரியா நாராயணன், தேசியக் கல்லூரியின் கல்வி இயக்குநர் கே. அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு உயர்கல்வி கற்பித்தல் முறை குறித்து விவாதித்தனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp