4 மணி நேரம் தாமதமாக வந்த மலேசிய விமானம்

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மலிண்டோ விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். 


மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மலிண்டோ விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். 
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு இரவு நேர விமான சேவையாக மலிண்டோ விமானம் இரவு 10.35 மணிக்கு வந்து 11.25 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு 10.35 மணிக்கு வரவேண்டிய விமானம் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து மலிண்டோ விமானத்தில் கோலாலம்பூர் செல்லவிருந்த பயணிகள் விமானநிலைய  மற்றும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது அவர்கள் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு, விமானம் புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக வரும் என தெரிவித்தனர்.  இதையடுத்து விமானம் தாமதம் காரணமாக தங்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரக் கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் அதற்கு மறுத்துவிட்டனர். இதற்கிடையில் 4 மணி நேரம் தாமதமாக 2.40 மணிக்கு மலிண்டோ விமானம் திருச்சிக்கு வந்தடைந்தது. பின்னர் 120 பயணிகளுடன் கோலாலம்பூருக்கு 3.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் திருச்சி விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com