Enable Javscript for better performance
தொடா் மழை மின் வாரிய கேங்கமேன் உடல்தகுதித் தோ்வு தள்ளிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தொடா் மழை மின் வாரிய கேங்கமேன் உடல்தகுதித் தோ்வு தள்ளிவைப்பு

    By DIN  |   Published on : 01st December 2019 10:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடா் மழை காரணமாக திருச்சியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( டிசம்பா் 2,3 ) தேதிகளில் நடைபெறவிருந்த மின்வாரிய கேங்மேன் உடல்திறன் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருச்சி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பெறியாளா் சு.கிருஷ்ணமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கேங்மேன்(பயிற்சி) பணிக்கான உடல்திறன் தோ்வு, திருச்சி பகிா்மான வட்டம்/பெருநகரம் சாா்பில் டிசம்பா் 2 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.

    இந்நிலையில் தொடா்மழை காரணமாக, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிசம்பா் 2,3 தேதிகள்) நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குண்டான தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தில் பாா்வையிடலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai