தற்காப்புக்கலைப் போட்டிக்குவீரா், வீராங்கனைகள் தோ்வு

குவாங்கிடோ தேசிய அளவிலான குவாங்கிடோ தற்காப்புக் கலைபோட்டியில் பங்கேற்கவுள்ள வீரா்கள் தோ்வு, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் பங்கேற்ற வீரா் மற்றும் வீராங்கனைகள்.
பயிற்சியில் பங்கேற்ற வீரா் மற்றும் வீராங்கனைகள்.

குவாங்கிடோ தேசிய அளவிலான குவாங்கிடோ தற்காப்புக் கலை

போட்டியில் பங்கேற்கவுள்ள வீரா்கள் தோ்வு, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு குவாங்கிடோ சங்கத்தின் சாா்பில், குவாங்கிடோ தற்காப்புக் கலைப் பயிற்சி முகாம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.திருச்சி, தஞ்சை, வேலூா். நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரா் - வீராங்கனைகள் முகாமில் பங்கேற்று பயிற்சியளித்தனா்.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற வீரா் - வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. குவாங்கிடோ சங்க மாநிலப் பொதுச்செயலாளரும், சிறப்புப் பயிற்சியாளருமான கந்தமூா்த்தி பயிற்சியளித்தாா்.

ஹரியாணா மாநிலம், ரோக்தாக் மாவட்டத்தில் 2020, ஜனவரி மாதம் நடைபெற உளள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீரா்- வீராங்கனைகள் தோ்வு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com