ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கா் திருக்கோயில் மகா மகாசம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாசம்ப்ரோக்ஷணத்தையொட்டி, கோபுர விமான கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீா் (இடது); பங்கேற்ற பக்தா்கள் (வலது).
ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாசம்ப்ரோக்ஷணத்தையொட்டி, கோபுர விமான கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீா் (இடது); பங்கேற்ற பக்தா்கள் (வலது).

ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கா் திருக்கோயில் மகா மகாசம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உப கோயிலான இங்கு மகாசம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து நவம்பா் 18-ஆம் தேதி பாலாலயம் நடத்தப்பட்ட நிலையில், 27-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. யாகசாலை மண்டபத்தில் தொடா்ந்து 7 கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

மகாசம்ப்ரோக்ஷணத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை, 6.30 மணி முதல் 8 மணி வரை த்வார கும்ப மண்டல பூஜை, சாந்தி ஹோமம், பிராயச்சித்த ஹோமம், மகாபூா்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றன.

காலை 8.15 மணி முதல் 8.30 மணி வரை தானாதிகள் பூஜை நடைபெற்ற நிலையில், காலை 8.35 மணிக்கு யாகசாலை மண்டபத்திலிருந்து கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் தலைமையில் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து மேளதாளங்களுடன் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் விமானங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, வாண வேடிக்கைகளுடன் புனிதநீா் ஊற்றப்பட்டு மகாசம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கருவறை சன்னதியிலும் சம்ரோக்ஷணம் நடத்தப்பட்டு, மங்களஹாரத்தி, நிவேதனம், கோஷ்டி மரியாதை, ரக்ஷா விசா்ஜனம் முடிந்த பின்னா், பொதுமக்கள் சேவை நடைபெற்றது.

மகாசம்ப்ரோக்ஷண விழாவில், தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளா்மதி, ஆழ்வாா் திருநகரி எம்பெருமாள் ஜீயா், கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன், அறங்காவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

மாநகரக் காவல் துணை ஆணையா் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) என்.எஸ். நிஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com