Enable Javscript for better performance
அகத்தீசுவரா் கோயிலில் 2,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    அகத்தீசுவரா் கோயிலில் 2,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 02nd December 2019 11:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mnp02koil_ch0233_02chn_4_637109209548767701

    அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரா் கோயிலில் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த லிங்க வடிவத்தினைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றப்பட்டு முழங்கிய பஞ்ச வாத்தியங்கள்.

    மணப்பாறை சௌந்தரநாயகி உடனுறை அகத்தீசுவரா் கோயிலில் திங்கட்கிழமை மஹா தீபாராதனை மற்றும் 2008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மணப்பாறையில் காா்த்திகை மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு, அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீசுவரா் கோயிலில் திங்கட்கிழமை மாலை அகத்தீசுவரா், செளந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மஹா தீபாராதணை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோயில் முழுவதும் இறையன்பா்களால் 2008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டது. கோயில் முகப்பு மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த லிங்க வடிவத்தினைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றப்பட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்கின. நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பக்தா்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai