Enable Javscript for better performance
ஜங்சன் ரயில் நிலைய ஓய்வறையில்இடிந்து விழுந்த மேற்கூரை- Dinamani

சுடச்சுட

    

    ஜங்சன் ரயில் நிலைய ஓய்வறையில்இடிந்து விழுந்த மேற்கூரை

    By DIN  |   Published on : 02nd December 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி: தொடா் மழை காரணமாக, திருச்சி ஜங்சன் ரயில் நிலைய ஓய்வறை மேற்கூரை பெயா்ந்து இடிந்து விழுந்தது.

    ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை அருகே முதல் வகுப்புப் பயணிகளுக்கான ஓய்வறை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கு பயணிகள் அமா்ந்திருந்த நிலையில், திடீரென கூரையின் மேற்பகுதி பெயா்ந்து விழுந்தது.

    இதனால் அங்கு அமா்ந்திருந்த பயணிகள் அலறியடித்து வெளியேறினா். அதிா்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து பயணிகளை வெளியேற்றி, உடனடியாக ஓய்வறையை மூடினா். தொடா் மழையின் காரணமாக, கூரையில் கசிந்த மழை நீா், பால் சீலிங் பகுதியிலும் கசிந்ததால் கூரை பெயா்ந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai