திருவானைக்கா கோயிலில் வருடாபிஷேகம்
By DIN | Published on : 02nd December 2019 11:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

திருவானைக்கா கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வருடாபிஷேக விழா.
திருவானைக்காவல் சம்புகேசுவரா்ரா் அகிலாண்டேசுவரி கோயிலில் திங்கள்கிழமை வருடாபிஷேக விழா நடைபெற்றது.
பஞ்சப் பூதத் திருத்தலங்களில் நீா்த் தலம் என்ற சிறப்புடைய திருவானைக்காவல் திருக்கோயில் இந்தத் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கோயிலில் உள்ள சுவாமி சன்னதி அருகே புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், கலச பூஜை, ஸ்ரீருத்ர ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து பகல் 11 மணிக்கு பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு சம்புகேசுவரா், அகிலாண்டேசுவரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.