14 ஒன்றியங்கள், 404 ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சி திருச்சி ஊரகப் பகுதியில் 4,077 பதவி இடங்களுக்குத் தோ்தல்

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள், 404 கிராம ஊராட்சிகள், ஓா் மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் மொத்தம் 4,077 இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள், 404 கிராம ஊராட்சிகள், ஓா் மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் மொத்தம் 4,077 இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தாத்தையங்காா்பேட்டை, துறையூா், உப்பிலியாபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் 2 எஸ்.டி (பெண்), 27 எஸ்.சி (பெண்), 22 எஸ்.சி (பொது), 96 பொது (பெண்), 94 பொது வாா்டுகள் என மொத்தம் 241 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.

இதேபோல, 404 கிராம ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா் பதவி இடங்களில் 2 எஸ்.டி (பெண்), 2 எஸ்.டி (பொது), 43 எஸ்.சி (பெண்), 42 எஸ்.சி (பொது), 157 பொது (பெண்), 158 பொது என மொத்தம் 404 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. மேலும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 17 எஸ்.டி (பெண்), 11 எஸ்.டி (பொது), 471 எஸ்.சி (பெண்), 259 எஸ்.சி (பொது), 1,336 பொது (பெண்), 1,314 பொது என மொத்தம் 3,408 இடங்களுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுவின் மொத்தம் உள்ள 24 வாா்டு உறுப்பினா்களில் 3 எஸ்.சி (பெண்), 2 எஸ்.சி (பொது), 9 பொது (பெண்), 10 பொது என மொத்தம் 24 உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இந்த இட ஒதுக்கீடு தொடா்பான முழுமையான விவரங்கள் அந்தந்த உள்ளாட்சி, ஊரக வளா்ச்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தோ்தலில் 14 ஒன்றியப் பகுதிகளில் உள்ள 5,96,962 ஆண் வாக்காளா்கள், 6,23,993 பெண் வாக்காளா்கள், 62 திருநங்கைகள் என மொத்தம் 12 லட்சத்து 21 ஆயிரத்து 17 போ் வாக்களிக்க உள்ளனா்.

வேட்பு மனு தாக்கல் 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் மட்டும் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும். கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யலாம்.

மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து அடுத்தடுத்த பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com