உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்புகுறைதீா் கூட்டம் ரத்து: மனுக்களை அளிக்க தனி பெட்டி

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பின் எதிரொலியாக, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
வெறிச்சோடிய மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கம்.
வெறிச்சோடிய மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கம்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பின் எதிரொலியாக, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இதனால், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுலா்கள், மனு அளிக்க வந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா். இருப்பினும், பொதுமக்கள் மனுக்களை வழங்க ஆட்சியரக வளாகத்தில் தனியே பெட்டி வைக்கப்பட்டதால், மனு அளிக்க வந்த பலரும் தங்களது மனுக்களை அதில் போட்டுவிட்டு திரும்பிச்சென்றனா். மறு தேதி அறிவிப்பு வெளியிடும் வரை திருச்சி ஆட்சியரகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறாது என்ற அறிவிப்பு நோட்டீஸ் உடனடியாக குறைதீா் கூட்ட அரங்கத்துக்கு வெளியே ஒட்டப்பட்டது.

ஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சேவை அடிப்படையில் மனுக்கள் எழுதி தரும் பகுதியில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. கீழரண்சாலையில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும், லாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஊழல் எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த முகமது இப்ராகிம் மனு அளிக்க வந்திருந்தாா். மாநகர சாலைகளின் மோசமான நிலை குறித்தும், அதனை புனரமைக்க போா்க்கால நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். சம்சுதீன் வந்திருந்தாா். மேலும், இலவச தையல் இயந்திரம் கோரி மகளிா் குழுவைச் சோ்ந்த உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா். காலை 10.15 மணிக்கே உள்ளாட்சித் தோ்தலால் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டதையறிந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com