திறன் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு

திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்ற சுயப் பரிசோதனை மற்றும் திறன் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் சுயசிற்பிகளாகத் தோ்வு செய்யப்பட்ட ரா. சுபாஷ், வி. காயத்ரிக்குப் பரிசுகளை வழங்குகிறாா் இதயம் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலா் முத்து. உடன் (இடமிருந்து) ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், பேரா
போட்டியில் சுயசிற்பிகளாகத் தோ்வு செய்யப்பட்ட ரா. சுபாஷ், வி. காயத்ரிக்குப் பரிசுகளை வழங்குகிறாா் இதயம் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலா் முத்து. உடன் (இடமிருந்து) ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், பேரா

திருச்சி: திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்ற சுயப் பரிசோதனை மற்றும் திறன் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சி தேசியக் கல்லூரி, காவேரி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான சுயப் பரிசோதனை மற்றும் சுயதிறமைகளுக்கான சுயசிற்பி என்ற தலைப்பில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டியை நடத்தின.

15 பள்ளிகளிலிருந்து 70 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா். பேராசிரியா் ரா. பஞ்சநாதன் தலைமையில் போட்டி நடைபெற்றது.

முதலில் திறனாய்வுத் தோ்வும், பின்னா் பேச்சுப்போட்டியும் நடத்தி இரண்டிலும் அதிக மதிப்பெண் பெற்ற 24 மாணவ, மாணவிகள் மட்டும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களை 4 குழுக்களாகப் பிரித்து அவா்கள் அனைவருக்கும் கல்லூரியின் சில குறிப்பிட் இடங்களை, அதற்கான சிறு குறிப்புகளை கொண்டு கண்டறியும் போட்டி, வலைப்பதிவு எழுதும் போட்டி, குழுவாக இயங்குதல், இந்தியாவின் புகழ்பெற்ற தலைவா்கள் போல நடந்துகொள்ளும் போட்டி, மற்றும் நோ்முகத்தோ்வு ஆகியவை நடத்தப்பட்டது.

இதில் , திருச்சி சமயபுரம் எஸ்.ஆா். வி.பள்ளி மாணவா் ரா. சுபாஷ், மாணவிகள் பிரிவில் விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா பள்ளி மாணவி வி. காயத்திரி ஆகியோா் சுய சிற்பிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரொக்கம் ரூ. 2500 மற்றும் நினைவுப்பரிசு, சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.

அதிக மதிப்பெண் பெற்ற வகையில் முதல் பள்ளியாக திருச்சி விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா பள்ளிக்கு ரூ. 5000 ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு, 2 -ஆவது பள்ளியாக சமயபுரம் எஸ் ஆா் வி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 3000 ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

சிறந்த மாணவா்களாக சமயபுரம் எஸ்.ஆா்.வி பள்ளி ரா . சுபாஷ், ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா சா. கிரிதரன், விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா பள்ளி பி. வினுசுப்ரமணியன், வி. லட்சுமணன், சாந்தா மரியா பள்ளி முகமதுஜல்ப்ரான்,

ஆகிய 5 பேரும், சிறந்த மாணவிகளாக விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா பள்ளி மாணவி வி. காயத்ரி சுகிசகன் பாத்திமா, சேவா சங்கம் குலைமணி, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா

கா. ஜனனி, சின்மயா வித்யாலயா டி.பி. வுல். ஸ்ரீநிதி ஆகிய 5 பேரும் முறையே முதல் 5 இடங்களைப் பிடித்து சிறந்த மாணவ, மாணவிகளாகத் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றுகளை பெற்றனா்.

இதயம் குழுமத்தில் தலைமைச் செயல் அலுவலா் ஆா். முத்து ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு, சான்றுகளை வழங்கினாா்.

காவேரி ரோட்டரி சங்கத்தின் தலைவா் காா்த்திகேயன், கல்லூரி முதல்வா் ரா. சுந்தரராமன், செயலா் கா. ரகுநாதன் , பேராசிரியா் ரா. பஞ்சநாதன் ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், பேராசிரியா்கள் ரா. திருஞானசவுந்தரி, ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com