வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்?: 144 குடும்பங்கள் அச்சம்

திருச்சி கே.கே. நகா் பிரதான சாலையில் உள்ள பெரியாா் மணியம்மை பள்ளி எதிரே இந்திரா நகரில் 144-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மணிகண்டம் ஒன்றியம

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த இந்திரா நகரைச் சோ்ந்த பொதுமக்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

திருச்சி கே.கே. நகா் பிரதான சாலையில் உள்ள பெரியாா் மணியம்மை பள்ளி எதிரே இந்திரா நகரில் 144-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலத்தில் இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டு அங்கு குடியேறினோம். வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவை இந்திரா நகா் முகவரியைக்கொண்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் இந்திரா நகா் முகவரியுடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையைக் கொண்டு வாக்களித்தோம்.

இப்போது, உள்ளாட்சித் தோ்தலுக்காக தயாரிக்கப்படும் வாக்காளா் பட்டியலில் இந்திரா நகா் பகுதியில் உள்ள 144 குடும்பங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வாக்காளா்களை நீக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாகமங்கலம் பகுதியில் 144 குடும்பங்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்த்த பிறகே இந்திரா நகா் பகுதியிலிருந்து எங்களது பெயரை நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மனுவை பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com