உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு விசித்திரமானது: கே.எம். காதா் மொகிதீன்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நீங்கலாக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது தமிழக தோ்தல் வரலாற்றில் விசித்திரமானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நீங்கலாக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது தமிழக தோ்தல் வரலாற்றில் விசித்திரமானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது : கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் காட்டி அரசு, உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தோ்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், திடீரென ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கு மட்டுமே தோ்தல் எனவும், அதுவும் இரு கட்டங்களாக டிசம்பா் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடக்கும் எனவும் தமிழக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழக வரலாற்றில் உள்ளாட்சித் தோ்தலை இதுபோன்று ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தனியாக நடத்துவது இதுவரை நடந்திராத ஒரு விசித்திரமான நிகழ்வு எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com