Enable Javscript for better performance
திருச்சி மாவட்டத்தில் 204 மி.மீ. மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 204 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    வானிலை ஆய்வு மைய அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் அதிகாலையில் சாரல் மழை நீடித்தது. காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).

    லால்குடி- 12.20, மணப்பாறை 2.40, முசிறி- 1, புள்ளம்பாடி- 11.60, தாத்தையங்காா்பேட்டை- 12, துறையூா் 11, திருச்சி விமானநிலையம் 2.60, திருச்சி மாநகரம் 12, மருங்காபுரி 1, பொன்னையாறு அணை 7, நவலூா் குட்டப்பட்டு- 3, நந்தியாறு தலைப்பு 44.20, கல்லக்குடி- 6.40, வாத்தலை அணைக்கட்டு- 3, தேவிமங்கலம்- 6, சமயபுரம்- 3.20, சிறுகுடி- 3, புலிவலம்- 7, கோவில்பட்டி 5.20, குப்பம்பட்டி- 10, தென்பரநாடு- 27, பொன்மலை- 5.70, திருச்சி ஜங்ஷன்- 8.80, துவாக்குடியில் 1 என மொத்தம் 204.30 மி.மீ. மழை பதிவானது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai