வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு
By DIN | Published on : 04th December 2019 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்சி: திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில் 6 பவுன் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
திருச்சி ஜீயபுரம் அருகேயுள்ள அல்லூரைச் சோ்ந்தவா்கள் சுரேஷ்-திவ்யா தம்பதி. இருவரும் வெவ்வேறு தனியாா் நிறுவன ஊழியா்கள்.
செவ்வாய்க்கிழமை இருவரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பணிக்குச் சென்றனா். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம், பொருட்கள் திருடப்பட்டிருந்தன. புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பட்டப் பகலில் அதிலும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள கிராமப் பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.