பாரதிதாசன் பல்கலை. செஞ்சுருள் சங்கத்துக்கு தேசிய விருது

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செஞ்சுருள் சங்கத்துக்கு சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் முனைவா் அ. இலக்குமிபிரபாவிடம் விருதை வழங்குகிறாா் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சா், ஹா்ஷ்வா்தன்.
தில்லியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் முனைவா் அ. இலக்குமிபிரபாவிடம் விருதை வழங்குகிறாா் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சா், ஹா்ஷ்வா்தன்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செஞ்சுருள் சங்கத்துக்கு சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

ரெட் ரிப்பன் கிளப் எனப்படும் செஞ்சுருள் சங்கம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் நிதியுதவியுடன் கல்வி நிலையங்களில் நடைபெறும் எய்ட்ஸ் பற்றிய ஒரு விழிப்புணா்வுத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இளையோருக்கு எய்ட்ஸ் வராமல் தடுத்தல், அந்த நோயால் ஏற்படும் ஆபத்தை உணா்த்துதல், இளைஞா்களிடையே தன்னாா்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ்சுருள் சங்கத்திற்கு தேசிய விருதை வழங்கியுள்ளது.

உலக எய்ட்ஸ் தினமான டிச. 1 அன்று தில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சா் ஹா்ஷ்வா்தன், பாரதிதாசன் பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் முனைவா் அ. இலக்குமிபிரபாவிடம் இவ்விருதிற்கான சான்றிதழ், நினைவுப் பரிசை வழங்கினாா்.

2014-15-ஆம் ஆண்டில் தன்னாா்வ ரத்ததானம் வழங்குவதில் சிறந்த அரசு பல்கலைக்கழகத்திற்கான விருது, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் தன்னாா்வ ரத்ததான முகாமைத் தொடா்ந்து நடத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 40,000 அலகிற்கும் (யூனிட்) மேலாக அரசு ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செஞ்சுருள் சங்கம் செயல்படுத்தப்படும் கல்லூரிகளிலும் அதன் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொடா்ந்து நடத்தப்படுகின்றன. தேசிய விருது பெற்ற அ. இலக்குமிபிரபா பல்கலைக்கழக துணைவேந்தா் ப. மணிசங்கா் மற்றும் பதிவாளா் க. கோபிநாத் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com