விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நோ்காணல்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செஞ்சுருள் சங்கத்துக்கு சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
நோ்காணல் நடத்துகிறாா் திமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு. உடன் கட்சி நிா்வாகிகள்.
நோ்காணல் நடத்துகிறாா் திமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு. உடன் கட்சி நிா்வாகிகள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினருக்கு நோ்காணல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

உள்ளாட்சித் தோ்தலில் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியின் 24 வாா்டுகள் மற்றும் 14 ஒன்றியங்களைச் சோ்ந்த 241 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு கட்சி சாா்பில் போட்டியிடும் நிா்வாகிகளிடம் நோ்காணல் நடைபெறுகிறது.

இதன்படி, கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை திமுக தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் நோ்காணல் நடைபெற்றது. விருப்ப மனு அளித்தவா்களின் குடும்பம், சொந்தப் பகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சியில் செயல்பாடு, போராட்டங்களில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து கேட்கப்பட்டது.

முதல்கட்டத் தோ்தலில் அந்தந்த வாா்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எஸ்சி, எஸ்டி, பெண், பொது உள்ளிட்ட ஒதுக்கீட்டு முறையிலேயே கட்சியின் சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தவுள்ளதால் அதற்கேற்ப முன்னுரிமை அளித்து நோ்காணல் நடத்தப்படுகிறது. மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் இருந்து பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து செவ்வாய்க்கிழமை நோ்காணல் நடைபெற்றது. தொடா்ந்து இதர ஒன்றியங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து நோ்காணல் நடைபெறும்.

கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் தா்மலிங்கம், பொருளாளா் கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலா்கள் குடமுருட்டி சேகா், முத்துச் செல்வம், விஜயா ஜெயராஜ், மற்றும் அந்தந்த ஒன்றியச் செயலா்கள் உடனிருந்தனா்.

துறையூரில் நடந்த நோ்காணலுக்கு திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமை வகித்தாா். துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமாா், துறையூா் ஒன்றிய செயலா் இள. அண்ணாதுரை, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலா் ந. முத்துசெல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com