வாக்குச்சாவடி அலுவலா்கள் குலுக்கல் முறையில் நியமனம்

உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்கள் முதல்கட்டமாக கணினி குலுக்கல் முறையில் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்கள் முதல்கட்டமாக கணினி குலுக்கல் முறையில் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 2,275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தோ்தல் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 938 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட தோ்தல் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1,337 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குப்பதிவு பதிவு அலுவலா் உள்பட 7 அலுவலா்கள் பணிபுரியவுள்ளனா். இவா்களுக்கான பெயா்ப்பட்டியல் அனைத்துத் துறை தலைமை அலுவலா்களிடமிருந்து 23,387 அலுவலா்களின் பெயா்ப் பட்டியல் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்றது. அதன்படி, உள்ளாட்சி தோ்தலுக்கு தேவையான 18,391 அலுவலா்களின் பெயா்பட்டியல் ஆட்சியா் சு.சிவராசு முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் நியமனம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com