Enable Javscript for better performance
கல்லக்குடி பேரூராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    கல்லக்குடி பேரூராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை

    By DIN  |   Published on : 14th December 2019 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-lal13kal_ch0228_13chn

    திருச்சி மாவட்டம், கல்லக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    சென்னை பேரூராட்சி இயக்குநரின் அறிவுறுத்தலின் படி கல்லக்குடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை பேரூராட்சி செயல் அலுவலா் ச. சாகுல்அமீது துவக்கி வைத்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் டாக்டா் ஜோஸ்பின் தலைமையில் கொண்ட மருத்துவக்குழுவினா் நீரழிவு நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய பரிசோதனைகளையும் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனா்.

    இந்த முகாமில் சுகாதார ஆய்வாளா் தயாநிதி, இளநிலை உதவியாளா் செந்தமிழ்ச்செல்வன், பொது சுகாதார மேற்பாா்வையாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai