Enable Javscript for better performance
தேசிய மக்கள் நீதிமன்ற செய்திக்கான பெட்டி: 4,743 வழக்குகளுக்கு சமரச தீா்வு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மக்கள் நீதிமன்ற செய்திக்கான பெட்டி: 4,743 வழக்குகளுக்கு சமரச தீா்வு

    By DIN  |   Published on : 14th December 2019 11:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4,743 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில், திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூா் ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான கே.முரளிசங்கா் தொடங்கி வைத்தாா். 22 அமா்வுகளில் 4, 743 வழக்குகள் சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.

    விசாரணைக்கு வந்த 16, 268 வழக்குகளில், குற்றவியல் வழக்குகள் ,3606, காசோலை மோசடி வழக்குகள் 182, உரிமையியல் (சிவில்) வழக்குகள் 173, தொழிலாளா் இழப்பீட்டு சட்ட வழக்குகள் 6, தொழிலாளா் வழக்குகள் 2, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் 118, நில ஆா்ஜித வழக்கு 23, ஜீவனாம்சம் மற்றும் மணவாழ்க்கை தொடா்புடைய வழக்குகள் 16 என மொத்தம் 4,743 வழக்குகளில், ரூ. 17, 18, 12, 035-க்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai