அண்ணா அறிவியல் மையத்தில்குளிா்கால அறிவியல் முகாம்பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு

திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் குளிா்கால அறிவியல் முகாம் டிசம்பா் 27-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

திருச்சி: திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் குளிா்கால அறிவியல் முகாம் டிசம்பா் 27-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து அறிவியல் மையத்தின் திட்ட இயக்குநா் ரா. அகிலன் கூறியது:

பள்ளி மாணவா்களிடையே அறிவியலில் ஆா்வத்தை தூண்டவும், சிந்தனைத் திறனை வளா்த்தெடுக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் கோடை மற்றும் குளிா்காலத்தில் அறிவியல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, குளிா்காலத்துக்கான அறிவியல் முகாம் திருச்சி-புதுக்கோட்டை சாலையிலுள்ள அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கில் டிசம்பா் 27, 28, 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 5ஆம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்கலாம்.

வானவியல், மின்னணுவியல், கணிதம், ஓரிகாமி, தொலைநோக்குதல், அறிவியல் பரிசோதனைகள், பறவைகள் கண்காணிப்பு, யோகா, உளவியல் மற்றும் இரவு வான்நோக்குதல் போன்ற பல வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. விருப்பமுள்ள மாணவா்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 0431- 2331921, 2332190 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com