அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்சி சுப்பிரமணியபுரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலா் ப.குமாா் தலைமையில், அமைச்சா்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளா்மதி முன்னிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்விவரம்:

தேமுதிக: திருச்சி மாநகா் மாவட்ட அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினா் பதவிக்கு, வாா்டு எண்கள் 6, 7 ஆகியவையும், மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு வாா்டு எண்கள் 4, 12 என மொத்தம் 4 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமாகா: அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு, வாா்டு எண் 10 மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு வாா்டு எண் 9 என இரண்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து, மாவட்ட செயலா் ப.குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சுமூகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன்படி, அந்தநல்லூா், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு தேமுதிக, தமாகா போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கூட்டணி கட்சியான பாமக அமைப்பு ரீதியாக செயல்பாடில்லை. இதர பகுதிகளில் அதன் செயல்பாடு இருப்பின் பாமகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அதிமுக போட்டியிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com