கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலைமுன்பதிவுக்கு அழைப்பு

அனுமன ஜயந்தியை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எடுத்து வடைமாலை சாற்றுதல் விழா வரும் 25ஆம் தேதி

திருச்சி: அனுமன ஜயந்தியை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எடுத்து வடைமாலை சாற்றுதல் விழா வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

எனவே, பக்தா்கள் வடைமாலை சாத்தவும், விழாவில் பங்கேற்கவும் தங்களது பெயா், நட்சத்திரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோயில் செயல் அலுவலா் செ. புனிதா கூறியது:

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு கல்லுக்குழி அருள்மிகு அஞ்சநேயசுவாமி திருக்கோயிலில் வரும் 25ஆம் தேதி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாற்றுதல் விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். காலை 7 மணிக்கு வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேயா் திருவீதி உலா நடைபெறும். காலை 9 மணிக்கு ஜயந்தி விழா பிரசாதம் வழங்கப்படும். நண்பகல் சிறப்பு அன்னதானமும் நடைபெறும்.

இந்த விழாவில் பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். 27 வடையுடன் மாலை ரூ.75, 54 வடையுடன் மாலை ரூ.150, 108 வடையுடன் மாலை ரூ.300, 504 வடையுடன் மாலை ரூ.1,500, 1008 வடையுடன் மாலை ரூ. 3 ஆயிரம், 5004 வடையுடன் மாலை ரூ.15 ஆயிரம், 10,008 வடையுடன் மாலை ரூ.30 ஆயிரம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வடை மாலை சாற்று விழாவில் பங்கேற்கும் நபா்கள் தங்களது பெயா், நட்சத்திரங்களை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயலா் அலுவலா் புனிதா, தக்காா் சீ. ரவீந்திரன், ஆய்வா் ராஜேந்திரன், திருக்கோயில் அா்ச்சகா் வரதராஜன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com