வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொட்டியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு (இடமிருந்து 3-ஆவது). உடன், வருவாய்த்துறை அலுவலா்கள்.
தொட்டியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு (இடமிருந்து 3-ஆவது). உடன், வருவாய்த்துறை அலுவலா்கள்.

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 ஒன்றியங்களில் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றியங்களுக்குள்பட்ட 24 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 404 கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 4,077 பதவிகளுக்கு வரும் டிச.27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

14 ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்கள் அமைப்பது தொடா்பாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டாா்.

மேலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு போதிய வசதிகள் உள்ளதா? எந்த கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது என்பது தொடா்பாக ஆய்வு செய்து உரிய பட்டியல் வழங்குமாறு அந்தந்த ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக முசிறி ஒன்றியத்துக்குள்பட்ட குணசீலத்தில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, முசிறி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா். மனோகரன், ஆா். லலிதா, தா. பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ. சாமிநாதன், ஏ. மணிவேல், தொட்டியம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம். செந்தில்குமாா், எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com