சுடச்சுட

  

  அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர பெற்றோர்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 12th February 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பீமநகர் மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  திருச்சி பீமநகர் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர், குறைதீர்நாள் முகாமிற்கு வந்து,   பள்ளியில் புதிய கட்டடம் மற்றும் வகுப்பறைகள் கட்டித்தரவேண்டும், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்த தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
  கவிபாரதி நகரில் அடிப்படை வசதி: திருச்சி, கே.கே. நகர், கவிபாரதி நகரில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும், அங்கன்வாடி (பால்வாடி) மையத்துக்கு கான்கிரீட் கட்டடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவிபாரதி நகர் குடியிருப்போர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
  விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என கீழக்குறிச்சி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
  குவிந்த பொதுமக்கள்: 2019ஆம் ஆண்டு தொடங்கிய பின்னர், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் வரையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த குறைதீர் நாள் முகாம் கூட்டத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால் ஆட்சியரக வளாகம் பரபரப்பாக இருந்தது. கூட்டம் அதிகமானதால், போலீஸாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai