சுடச்சுட

  

  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

  By DIN  |   Published on : 12th February 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரிடம் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 2ஆவது பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்கு இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  இந்த சேமிப்பு பத்திரங்களை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பித்து அதற்கான ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகையை குழந்தைகள் 10ஆம் வகுப்பு முடித்து அதற்கான கல்வி சான்று பெற்ற பிறகு பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ, 0431-2413796 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai