சுடச்சுட

  

  பெல் சார்பில் சாரதா பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள்

  By DIN  |   Published on : 12th February 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சார்பில் சாரதா நடுநிலைப் பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
  பாரதமிகு மின் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், திருச்சி காமராஜபுரம் நகரியத்தில் உள்ள சாராதா நடுநிலைப் பள்ளிக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. 
  இதில், வண்ண, வண்ண ஊஞ்சல்கள், ஊசலாட்ட பலகைகள், ரங்க ராட்டினங்கள், சறுக்கு மரங்கள், உடற்பயிற்சி கம்பிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
  இந்த உபகரணங்கள் வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பெல் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு கூடுதல் பொது மேலாளர் ஏ.எஸ். சமது, இந்த உபகரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். விழாவில், பள்ளித் தலைமையாசிரியர் சுமதி, ஆசிரியர்கள், பெல் நிறுவன அலுவலர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai