சுடச்சுட

  

  போலி ஆவணங்கள் பெற்று மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்த இருவர் கைது

  By DIN  |   Published on : 12th February 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போலி ஆவணங்கள் பெற்று மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்த இருவரை திருச்சி விமான நிலையத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
  மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த விமானப் பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது,  மதுரை மாவட்டம் விளாங்குடி, கரிசல்குளம் அய்யர் தெருவைச் சேர்ந்த பாலுமகன் பிரபாகரன் (28), ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சி. அன்புமணி (35) ஆகிய இருவரும்,  தங்களது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக கூறி, அவசரகால சான்று (எமர்ஜென்சி சர்டிபிகேட் ) மூலம் டிக்கெட் எடுத்து  வந்துள்ளனர்.
  அவர்களது பாஸ்போர்ட் எண் குறித்து குடியேற்றப்பிரிவு போலீஸார் கணினியில் ஆய்வு செய்தபோது, அந்த பாஸ்போர்ட் தொலைந்தது தொடர்பாக ஏற்கெனவே அவசரகால சான்று பெற்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புகாரின் பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரன், அன்புமணி இருவரையும் கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai