சுடச்சுட

  

  மணப்பாறையில் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 12th February 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
  மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பெருமன்றத்தின் 16 ஆவது மாநாட்டுக்கு நஜீர் அகமது, இப்ராஹிம், ஜான்சன், ராஜ்குமார், விவேக்மதி, தேவிகலா தலைமை வகித்தனர்.
   மாநிலச் செயலர் பாலமுருகன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. இந்திரஜித்,
  ஏஐடியுசி மாவட்டத் தலைவர் க.சுரேஷ், புறநகர் மாவட்டத் துணைச் செயலர்கள் செல்வராஜ், பழனிச்சாமி, நகரச் செயலர் ஜனசக்தி உசேன், ஒன்றியச் செயலர் தங்கராசு, மாநகர் மாவட்டத் துணைச் செயலர்  முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
  பெருமன்ற மாவட்டச் செயலர் ராஜ்குமார் வேலை அறிக்கை வாசித்தார். 
  இதைத் தொடர்ந்து இளைஞர் பெருமன்றம் திருச்சி புறநகர் மற்றும் மாநகராகப் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மணப்பாறையில் இயங்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்  அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai