சுடச்சுட

  

  இலக்கிய வரலாற்றின் கலைபொக்கிஷமாக முற்கால இலக்கியங்களே விளங்குவதாக பேராசிரியர் கு. கணேஷ் தெரிவித்தார்.
  திருச்சி தேசியக் கல்லூரியில் முன்னாள் முதல்வர் சாரநாதன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் கு. கணேஷ் பேசியது:
  காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. காப்பியத்தில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகை உள்ளது. இந்த இலக்கியங்களில் குறிப்பிடும் வகையாக அமைந்திருப்பவை முற்கால இலக்கியங்களே. 
  முதல் குடிமக்கள் இலக்கியமாகவும் விளங்குகிறது. இந்த இலக்கியமானது ஆதிகாலம் தொட்டு இன்று வரையிலும் வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இலக்கியமானது மக்களின் சிந்தனையை தூண்டி, ஞாபக சக்தியை பொருத்தே அமைக்கப்படுகிறது. இவ்வகை இலக்கியத்தில் காலம், நேரம், கதா பாத்திரங்கள் கோர்வையாக இருப்பதில்லை. இருப்பினும் இலக்கிய வரலாற்றின் கலைப்பொக்கிஷமாக விளங்குவது முற்கால இலக்கியங்கள்தான் என்றார்.
  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரா. சுந்தரராமன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர்கள் ஆர். இளவரசு, ஆர். வனிதா, ஒருங்கிணைப்பாளர் டி. பெனட் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai