பொருளியலுக்கான நோபல் பரிசு: பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொருளியலுக்கான நோபல் பரிசு எனும் தலைப்பில் வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொருளியலுக்கான நோபல் பரிசு எனும் தலைப்பில் வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரதிதாசன் பல்கலைக் கழத்தில் திங்கள்கிழமை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டுக் குழுவும், வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறையும் இணைந்து நடத்திய நிகழ்வை, ஸ்மார்ட் மேலாண்மைக் கல்வி இதழின் உதவி ஆசிரியர் மோகன் ஞானஒளிவு தொடக்கி வைத்து பேசினார். பொருளாதார கொள்கையில் சுற்றுச் சூழலை ஒருங்கிணைத்தல் எனும் தலைப்பில், பல்கலைக் கழக முன்னாள் மூத்த பேராசிரியர் எஸ். அய்யம்பிள்ளை சிறப்புரையாற்றினார். முதலாளித்துவ நாடுகளின் பிரச்னைகளை சரி செய்ய பன்னாட்டு நிறுவனங்களால் இயலாதபோது, பொருளாதார அறிவியல் சிறந்த வழிகாட்டியாக அமையும். சுற்றுச் சூழலை பாதுகாத்தல், எல்லை கடந்த பிரச்னைகளிலும், நீடித்த வளர்ச்சியின் பங்களிப்பிலும் பொருளதார அறிவியல் இடம் பெற்றிருப்பதை மறுக்க முடியாது என்றார். பொருளாதார கொள்கைகளில் புதுமைகளை ஒன்றிணைத்தல் எனும் தலைப்பில் முனைவர் எஸ்.எம். சூரியகுமார் பேசினார். இந்த நிகழ்ச்சியில், 2018ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசுகளை வென்ற வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்கள் குறித்தும், அவர்களின் நோபல் பரிசுகளுக்கான ஆராய்ச்சி குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.
நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து மேலாண்மை புலத் தலைவர் மு. செல்வம் விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் செ. வனிதா, ஜெ. காயத்ரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com