சுடச்சுட

  

  ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும்  ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டதை கண்டித்து, சிஐடியூ தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்னா  நடைபெற்றது. 
  திருச்சி கொட்டப்பட்டு பகுதியிலுள்ள ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த சரவணன், ஜெயக்குமார், கணேசன் ஆகிய மூவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதால்  பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து  சிஐடியூ ஆவின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், பாதிக்கப்பட்ட 3 தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை  தர்னா மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்தப் போராட்டத்தில், சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினர் மாறன், சங்க மாவட்டத் தலைவர் ரங்கராஜன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
  ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு, ஆவின் நிறுவனம், ஒப்பந்த நிறுவனம், தொழிற்சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இதில், 3 தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai