சுடச்சுட

  

  திருச்சி - சேலம் புறவழிச்சாலையில் இருந்து கொளக்குடிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சிக்குள்பட்ட கொளக்குடிக்கு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக நாச்சியார்புதூர், தாதம்பட்டி காட்டுமாரியம்மன் கோயில், திருஈங்கோய்மலை பகுதிக்கு மக்கள் சென்றுவருகின்றனர். குண்டும் குழியுமான இச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாவதுடன் இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். ஆகவே, இச் சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai