சுடச்சுட

  

  திருச்சியில் தொ டர்ந்து ஒரே இடத்தில் மூன்றுஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்  உமாசங்கர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவுக்கும், அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றிய  ஏ. ராஜேந்திரன் ஸ்ரீரங்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் பாரதிதாசன் பொன்மலை சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும், கொடுஞ்செயல் குற்றப்பிரிவு பறக்கும் படை ( கிரைம் ஸ்குவாடு1) ஆய்வாளர் ரோசலின் பொன்மலை குற்றப்பிரிவுக்கும்,  உறையூர் குற்றப்பிரிவு  ஆய்வாளர் பெரியசாமி  கொடுஞ்செயல்  குற்றப்பிரிவு (கிரைம் ஸ்குவாடு -1) க்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  சைபர் கிரைம் ஆய்வாளர் காவேரி   திருச்சி விமான நிலையத்துக்கும் , விமான நிலைய ஆய்வாளர் பெரியய்யா, சைபர்  கிரைம் பிரிவுக்கும்,  பாதுகாப்புப் பிரிவு (செக்யூரிட்டி ) ஆய்வாளர் சாந்தி, கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். கே.கே.நகர் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர்  வேல்முருகன்  செக்யூரிட்டி பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, கே.கே. நகர் சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கும், அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றிய கே. சுப்பையா கன்டோன்மென்ட்  குற்றப்பிரிவுக்கும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  மக்களவைத் தேர்தலையொட்டி இவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai