சுடச்சுட

  

  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.14) மின்தடை செய்யப்படுகிறது.
  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மணப்பாறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தாநத்தம் 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
  இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும்  புத்தாநத்தம், இடையப்பட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிப்பட்டி, கணவாய்ப்பட்டி, கழனிவாசல்பட்டி, பன்னாங்கொம்பு, பண்ணப்பட்டி, அமயபுரம், பெரும்மாபட்டி, தாதமலைப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, பிள்ளையார்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி.அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைபட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai