சுடச்சுட

  

  திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
  பேட்டைவாய்த்தலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தனபால் மனைவி கன்னியம்மாள் (60).  வேலை விஷயமாக தனது பேரன் அரவிந்துடன்  திருச்சி நோக்கி திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்தார்.
  சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
   இதில் கன்னியம்மாள் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார். அரவிந்துக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai