சுடச்சுட

  

  துறையூர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  திருச்சி  காவேரி மகளிர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மற்றும் ஆய்வுத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவித் தலைமையாசிரியை எம்.மாலதி தலைமை வகித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியை வித்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  பேசினார். அவர் தனது உரையில்,  தேவைகள் அதிகம் உள்ள மனிதர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
  நிறைவில், சமூக பணித்துறை மாணவி ஜே. நிர்மலாதேவி நன்றி கூறினார். ஏராளமான மாணவிகள் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai