சுடச்சுட

  

  மதிமுக பொதுச் செயலர் வைகோ வருகையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் உரையாற்றுவதற்காக வைகோ வந்தார். 
  பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருவதால், வைகோ வருகையின்போது பாரத் மாதா முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபையினர் அறிவித்திருந்தனர்.
  இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயில் முன்பு செவ்வாய்க்கிழமை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
  வைகோ கார் வருவதையறிந்து அந்தப் பகுதியில் நின்றபடி பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்ட அகில பாரத இந்து மகா சபையின் மாவட்டத்தலைவர் ஆனந்தை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai