திருச்சியில் பிப்ரவரி 16 மின்தடை
By DIN | Published On : 14th February 2019 08:49 AM | Last Updated : 14th February 2019 08:49 AM | அ+அ அ- |

திருச்சி 110 கே.வி. துணை மின்நிலையத்தில் அவசரகால பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (பிப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மத்திய பேருந்துநிலையம், ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, புராமினெட் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, ஆட்சியரக பகுதிகள், வார்னர்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, ரெனால்ட்ஸ் சாலை, கண்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை சாலை, மேம்பாலம் பகுதி, ஜென்னி பிளாசா, கான்வென்ட் சாலை, தலைமை அஞ்சல்நிலைய பகுதி, குட்ஷெட் சாலை, முதலியார் சத்திரம், காஜாபேட்டை பகுதி, உறையூர் பகுதி, மேட்டுத் தெரு, வாலாஜா பஜார், வயலூர் சாலை, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், உறையூர் வெக்காளியம்மன் கோயில், பாத்திமா நகர், குழுமணி சாலை, நாச்சியார் கோயில் முதல் சீராத்தாப்பு வரை இருபுறம், பொன்னகர், கிராப்பட்டி, அரசு காலனி, ராஜீவ்காந்தி நகர், தீரன் நகர், பிராட்டியூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.