நீதிமன்றத்தில் மார்ச் 8-இல் ஆஜராக மு.க. ஸ்டாலினுக்கு உத்தரவு

தமிழக  முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் , மார்ச் 8 ஆம் தேதி திருச்சி

தமிழக  முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் , மார்ச் 8 ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் மதகுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  சேதமடைந்த பகுதியை  அந்த மாதத்திலேயே  எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, அணை உடைந்ததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் எனவும், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குறித்தும் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக,  திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது அரசு வழக்குரைஞர் பி.சம்பத்குமார் வழக்குத்தொடர்ந்தார். 
இந்த வழக்கின் விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.குமரகுரு முன்னிலையில் புதன்கிழமை வந்தது. 
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான மு.க. ஸ்டாலின் தரப்பு வழக்குரைஞர்கள், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சட்டப் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதால் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினர். மேலும், வழக்கை சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றவும் முறையீடு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்குரைஞர் சம்பத்குமார், கடந்த முறை விசாரணையின்போதும் மு.க. ஸ்டாலின் ஆஜராகவில்லை. இந்த முறையும் ஆஜராகவில்லை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ். குமரகுரு, வழக்கு விசாரணைக்காக வரும் மார்ச் 8ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். 
அதன் பிறகே வழக்கை சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com