இலவச கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி

இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் திருச்சி கால்நடை பல்கலைக்கழக

இலவச கறவை மாடு வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் இலவச கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள், தீவனப்பயிர் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு, ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இந்தபயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும்.
விருப்பமுள்ளோர் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பேராசிரியரும், மையத்தலைவருமான பி.என். ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com