முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சிகிச்சை பலனின்றி செவிலியர் சாவு
By DIN | Published On : 28th February 2019 10:57 AM | Last Updated : 28th February 2019 10:57 AM | அ+அ அ- |

திருச்சி அரசு மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற செவிலியர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே பெருமாள் கவுண்டம்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி சுசீலா (25). திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வந்த இவர்,சனிக்கிழமை காலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி செவிலியர் தங்கும் விடுதியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சக செவிலியர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனயில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"புலம்பெயர்ந்தோரின் ஆய்வு நூல்கள் எழுதப்பட வேண்டும்'திருச்சி, பிப்.27: புலம்பெயர்ந்தோரின் ஆய்வு நூல்கள் எழுதப்பட வேண்டும் என மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பா. ஆனந்தகுமார் தெரிவித்தார்.
திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் புதன்கிழமை நடைபெற்றன.
இதில், அண்மைக்கால புனைகதை போக்குகள் எனும் தலைப்பில் திண்டுக்கல் காந்திகிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவரும், மொழிப்பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான பா.ஆனந்தகுமார் பேசுகையில்,
பெண்ணியம் என்பது இனம், நிறம், வர்க்கத்தின் அடிப்படையில் தான் வேறுபடுகிறது. கிராமப்புற பெண்களின் விடுதலை குறித்து பல நூல்கள் எடுத்துகூறினாலும் பெண்ணியத்தின் விடுதலை குறித்த நூல்கள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
இலக்கியத்திற்கு இலக்கணம் தேடிய காலம் மாறிவிட்டது. இப்போது, வரும் சில நூல்களால் இலக்கணத்திற்கு இலக்கியம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்தவர்களின் அனுபவங்களை முறையாக ஆய்வு செய்து, அந்த இனத்தின் விடுதலைக்கு வித்திடும் வகையிலான நூல்களை எழுத வேண்டும் என்றார்.தொடர்ந்து, சிற்பி பாலசுப்பிரமணியம் அறக்கட்டளை சார்பில் நடந்த சொற்பொழிவில் இலக்கியமும், இலக்கிய சுவைப்பும் எனும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் அ.ஆலிஸ் உரையாற்றினார்.
இந்த நிகழ்வுகளுக்கு, கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் சையத் ஜாகிர் ஹசன் வரவேற்றார். கல்லூரிச் செயலர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூடுதல் துணைமுதல்வர் முகம்மது சிகாபுதீன், துணை செயலர் அப்துஸ் சமது, துணை முதல்வர் முகம்மது இப்ராஹிம் மற்றும் தமிழாய்வுத்துறை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.