முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஜெயலலிதா பிறந்தநாள்: துவரங்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 28th February 2019 10:58 AM | Last Updated : 28th February 2019 10:58 AM | அ+அ அ- |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாளையொட்டி, துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.
துவரங்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவுக்கு, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார்.
மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம. செங்குட்டுவன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சி. சின்னச்சாமி ஆகியோர் விழாவில் பங்கேற்று, 5000 பேருக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கினர்.
முன்னதாக, அதிமுக மாவட்டத் துணைச் செயலர் எம்.ஆர்.ராஜ்மோகன், பொன்னம்பட்டி பேரூர் செயலர் ஆ.திருமலைசாமிநாதன் வரவேற்றனர்.
நிறைவில் ஒன்றியத் துணைச் செயலர் பொன்னுசாமி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர் ரங்கசாமி நன்றி கூறினர்.