முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறை: சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
By DIN | Published On : 28th February 2019 10:58 AM | Last Updated : 28th February 2019 10:58 AM | அ+அ அ- |

மணப்பாறையில் முறையான குடிநீர் விநியோகம், சாலை சீரமைப்புக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நகராட்சிக்குள்பட்ட 16 ஆவது வார்டிலுள்ளது சேதுரத்தினபுரம். இங்கு மாதங்களுக்கு முன்பு காவிரிக் குடிநீர் விநியோகக் குழாய் சீரமைப்புக்காக சாலை தோண்டப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் குழாய் பதிப்பதற்காக தார்ச்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டால் மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தை ஏற்கனவே மேற்கொண்டனர்.
குழாய் பதிக்கப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும் குடிநீர்விநியோகத்தை முறைபடுத்தவில்லை எனக்கூறி இப்பகுதி மக்கள் புதன்கிழமை மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கு வந்த நகராட்சிப் பொறியாளர், , குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, சாலையைச் சீரமைத்தும் தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.