முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th February 2019 10:52 AM | Last Updated : 28th February 2019 10:52 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ். ரங்கராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எம். பன்னீர்செல்வம், திட்ட செயலர் செல்வராசு கோட்டச் செயலர்கள் பழனியாண்டி, ரவிச்சந்திரன், ரியாஜுதீன், நடராஜன் ஆகியோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர்.
பதவி உயர்வு, இடமாறுதல் உத்தரவு உள்ளிட்டவற்றில் காலதாமதம் கூடாது. ஊதியமின்றி பணியாற்றும் பகுதி நேர பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், திருச்சி பெருநகர் வட்டத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், மின்ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.